ஹீரோவாக களமிறங்கும் பிக்பாஸ் பிரபலம்: அய்யப்பனும் கோஷியும் ரீமேக்.. ஆனா தமிழ்ல இப்படி ஒரு டைட்டிலா..!

ஹீரோவாக களமிறங்கும் பிக்பாஸ் பிரபலம்: அய்யப்பனும் கோஷியும் ரீமேக்.. ஆனா தமிழ்ல இப்படி ஒரு டைட்டிலா..!

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் வருடம்தோறும் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ்.

ஐந்து சீசன்ங்களை கடந்து வெற்றிகரமாக 6-வது சீசனில் அடியெடுத்து வைக்க இருக்கிறது பிக்பாஸ். அதன்படி பிக்பாஸ் சீசன் 6 உடைய ப்ரோமோக்கள் எல்லாம் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்று இருக்கிறது.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பாலாஜி முருகதாஸ். அந்த சீசனில் மக்களிடம் ஆதரவை பெற்ற அவர் டைட்டில் ரன்னராகவும் மாறினார்.

இதற்கிடையே தற்போது பாலாஜி முருகதாஸ் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இது குறித்து அவரே தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

அந்த வகையில் படத்தின் பெயர் மார்கெண்டேயனும் மகளிர் கல்லூரியும் என வைக்கப்பட்டு இருப்பதாகவும், படத்தை லிப்ரா ப்ரோடக்‌ஷன்ஸ் சார்ப்பில் ரவீந்தரன் தயாரிப்பதாகவும் அறிவித்துள்ளார் பாலாஜி முருகதாஸ்.

லிப்ரா ப்ரொடக்ஷன் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ரவீந்திரன் தயாரிக்கும் தன்னுடைய படத்திற்கு “மார்க்கண்டேயனும் மகளிர் கல்லூரியும்” என்ற தலைப்பை வைத்திருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் பாலாஜி முருகதாஸ்.இந்த தலைப்பை பார்த்த பல இணையவாசிகள் பட தலைப்பை வைத்து பார்க்கும் பொழுது 2007 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற பிரித்விராஜ் சுகுமார் நடித்த சாக்லெட் படத்தின் ரீமேக்காக இருக்குமோ!? என்று சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.சமீபத்தில் மறைந்த தேசிய விருது பெற்ற ஐயப்பனும் கோஷியும் என்ற மலையாள திரைப்படத்தின் இயக்குனர் சச்சு கதாசிரியராக அறிமுகமான படம் சாக்லேட் ஆகும். சாக்லேட் படத்தின் ரீமேக்கா என்று படக்குழு எந்த தகவலும் கூறாத நிலையில், படம் குறித்த உண்மை தகவல்கள் படம் வெளிவந்த பின்னர் தான் தெரியவரும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *