வெளிவராத PS 1-க்கு ஸ்டார் ரேட்டிங் கொடுத்த விமர்சகர்’ -ஆடிப்போன சுஹாசினி போட்ட ட்வீட்..!

வெளிவராத PS 1-க்கு ஸ்டார் ரேட்டிங் கொடுத்த விமர்சகர்’ -ஆடிப்போன சுஹாசினி போட்ட ட்வீட்..!

நாளை வெளியாக இருக்கும் பொன்னியின் செல்வன் படத்தை 27ஆம் தேதியே விமர்சனம் செய்து அதற்கு ஸ்டார் ரேட்டிங்கும் கொடுத்த விமர்சகர்.

பொன்னியின் செல்வன் படம் குறித்து விமர்சனம் வெளியிட்ட நபருக்கு மணிரத்னம் மனைவி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கும் பொன்னியின் செல்வன் எதிர்பார்த்து நாளை வெளியாக இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் தான் இயக்கி இருக்கிறார். பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக்க பலர் முயற்சித்து இருந்தார்கள். அதை மணிரத்தினம் சாதித்து காட்டி இருக்கிறார்.

அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த படம் தயாராகி இருக்கிறது. இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.

இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். ஏற்கனவே படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முழுமையாக நிறைவடைந்து விட்டது. இந்த படம் நாளை செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், சில வாரங்களுக்கு முன் தான் பிரம்மாண்டமாக படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்து முடிந்தது. தற்போது படத்தின் ப்ரோமோஷன் பணிகளை படக்குழு விறுவிறுப்பாக நடத்தி வருகிறது. அதோடு இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 500 கோடி என்று என்று கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தை 150 நாட்களிலேயே எடுத்து முடித்துள்ளார்.

இப்படி ஒரு நிலையில் பொன்னியின் செல்வன் படம் குறித்து ட்விட்டரில் உமர் சந்து என்பவர் விமர்சனம் ஒன்றை வெளியிட்டுளளார். அதில் ‘பொன்னியின் செல்வன் முதல் விமர்சனம், அற்புதமான சினிமா, பயங்கரமான தயாரிப்பு மற்றும் VFX. விக்ரம் மற்றும் கார்த்தி ஒட்டுமொத்தமாக படத்தை கொள்ளையடித்துவிட்டார்கள். ஐஸ்வர்யா மீண்டு வந்துவிட்டார். மொத்தத்தில் சில திருப்பங்கள் மற்றும் கைதட்டல் காட்சிகளை கொண்ட ஒரு அழகான வரலாற்று படைப்பு. 3 ஸ்டார் என்று பதிவிட்டு இருக்கிறார்.

சுஹாசினி கேட்ட கேள்வி :

இந்த பதிவை கண்ட சுஹாசினி ‘யார் நீங்கள். இன்னும் வெளிவராத படத்தை உங்களால் மட்டும் எப்படி பார்க்க முடிந்தது’ என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். சுஹாசினியின் இந்த பதிவிற்கு கமன்ட் செய்துள்ள பல ரசிகர்கள் ‘இவர் உருட்டுக்கு பெயர் போனவர், சொல்லப்போனால் இவர் பொன்னியின் செல்வன் 2வையே பார்த்து இருப்பார்.

இவர் வெளியநாட்டில் தணிக்கை குழுவில் வேலை செய்வதாக குறிக்கொண்டு அணைத்து படத்திற்கும் இப்படி தான் செய்து வருகிறார். இவரை எதாவது செய்து தடை செய்யுங்கள்’ என்றும் கூறி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *