விஜய் ஆண்டனி வீட்ல இப்படி ஒரு பிரச்சனையா?.. யாருக்காக இந்த டிவிட்..? நெட்டிசன்கள் குழப்பம்..!

விஜய் ஆண்டனி வீட்ல இப்படி ஒரு பிரச்சனையா?.. யாருக்காக இந்த டிவிட்..? நெட்டிசன்கள் குழப்பம்..!

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் பாடகர், எடிட்டர், இயக்குநர், தயாரிப்பாளர், ஆகிய பன்முகங்களையும் கொண்டுள்ளார்.

கடைசியாக விஜய் ஆண்டனி நடிப்பில் கோடியில் ஒருவன் திரைப்படம் வெளியானது. இதனை தொடர்ந்து அக்னி சிறகுகள், தமிழரசன், ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் பிச்சைக்காரன் 2, காக்கி, கொலை, மழை பிடிக்காத மனிதன்,ரத்னம், ஆகிய படங்களிலும் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார். இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் விஜய் ஆண்டனி குறிப்பிட்டுள்ள பதிவு நெட்டிசன்களின் கவனத்தை பெற்றுள்ளது.

vijay antony_updatenews360

அவர் குறிப்பிட்டிருப்பதாவது,

” உங்க குடும்பத்துல எதாவது பிரச்சனன்னா, முடிச்ச வரைக்கும் உங்களுக்குள்ள அடிச்சிக்கங்க, இல்ல விட்டு விலகிடுங்க, இல்ல கைல கால்ல விழுந்து சமாதானம் பண்ணி சேர்ந்து வாழுங்க. அடுத்தவன மட்டும் கூப்புடாதிங்க. கும்மி அடிச்சி, கதைய முடிச்சிருவாங்க”

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் பல கேள்விகளை கேட்டு வருகின்றனர். அதில் ஒருவர் என்ன அண்ணா? வீட்டில் ஏதாவது பிரச்சனையா என கேட்டு உள்ளார்.

மேலும் ஒருவர், மிடில் கிளாஸ் ஆட்களுக்குதான் பிரச்சனை இருக்கும் என்று நினைத்தால் பணக்காரர்களுக்கும் பிரச்சனை இருக்கிறது என்றும், செலிபிரிட்டிகளே இப்படி புலம்ப ஆரம்பித்து விட்டார்கள் என்றும் பதிவிட்டு உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *