ரகசிய ஸ்பை வைத்த மனைவி.. வசமாக வலையில் சிக்கிய நடிகர்

ரகசிய ஸ்பை வைத்த மனைவி.. வசமாக வலையில் சிக்கிய நடிகர்

 

திருமணமாகி குழந்தை குட்டிகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் பிரபல நடிகர் ஒருவர் தன் மனைவியிடம் வசமாக சிக்கியது பற்றி தான் திரையுலகில் ஒரே பேச்சாக கிடக்கிறது. திறமையான நடிகர் என்று பெயர் வாங்கிய அந்த நடிகர் தற்போது பல திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

படம் ஓடுதோ இல்லையோ நடிகருக்கு மட்டும் எப்படி இவ்வளவு திரைப்படங்கள் புக் ஆகிறது என்பதுதான் சக நடிகர்களின் வயிற்றெரிச்சலாக இருக்கிறது. எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிக்கக்கூடிய அந்த நடிகர் சமீப காலமாக ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். ஏற்கனவே நடிகர் சக நடிகைகளுக்கு வாய்ப்பு வாங்கி கொடுப்பது பெரும் பிரச்சனையாக பேசப்பட்டது.

 

இந்நிலையில் நடிகர் தன்னுடன் நடித்த நடிகை ஒருவருடன் ரகசிய தொடர்பில் இருக்கிறாராம். இது நடிகரின் மனைவி காதுக்கு வந்தது தான் பெரிய பிரச்சினையாக மாறி இருக்கிறது. கணவரைப் பற்றி அடிக்கடி கிசுகிசுக்கள் வருவதால் மனைவி ரகசியமாக ஒரு உளவாளியை கணவரை கண்காணிக்கும் படி ஏற்பாடு செய்திருக்கிறார்.

நடிகரின் உதவியாளராகவே சுற்றிக் கொண்டிருக்கும் அந்த ஸ்பை தற்போது நடிகரின் நடவடிக்கைகளை பற்றி மனைவியாரிடம் போட்டுக் கொடுத்திருக்கிறது. இதைக் கேட்ட மனைவி ருத்ரதாண்டவம் ஆடாத குறையாக நடிகரை போட்டு நன்றாக காய்ச்சி இருக்கிறார்.

 

அது மட்டுமல்லாமல் இந்த விவகாரத்தை குடும்ப உறுப்பினர்கள் முன்னிலைக்கும் எடுத்துச் சென்றிருக்கிறார். இதனால் பதறிப்போன நடிகர் எவ்வளவு சொல்லியும் சுற்றி இருப்பவர்கள் காது கொடுத்தே கேட்கவில்லையாம். அதனால் நொந்து போன நடிகர் மனைவியின் காலில் விழாத குறையாக விளக்கம் கொடுத்து சமாதானப்படுத்தி இருக்கிறார்.

கணவரின் வார்த்தைகளை நம்பிய மனைவியும் தற்போது கொஞ்சம் சாந்தமாகி இருக்கிறாராம். இருப்பினும் மறுபடியும் ஏதாவது ஒரு செய்தி காதுக்கு வந்தால் விளைவு மோசமாக இருக்கும் என்று கணவரை மிரட்டி இருக்கிறாராம். இதுதான் தற்போது கோலிவுட்டின் முக்கிய செய்தியாக இருக்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *