‘மகாலட்சுமி வீட்ல விசேஷம்’- காதல் மனைவியின் கனவை நிறைவேற்றிய ரவீந்தர்: குவியும் வாழ்த்து..!

‘மகாலட்சுமி வீட்ல விசேஷம்’- காதல் மனைவியின் கனவை நிறைவேற்றிய ரவீந்தர்: குவியும் வாழ்த்து..!

காதல் மனைவி மகாலட்சுமியின் கனவை நனவாக்கியுள்ளார் ரவீந்தர். ஸ்மார்ட்ஃபோன்களில் 40% வரை தள்ளுபடியுடன் உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற சரியான மொபைல்களைக் கண்டறியவும், நம்பமுடியாத அம்சங்களுடன் மொபைல்களை வாங்கவும் மற்றும் அற்புதமான சலுகைகளுடன்

லிப்ரா ப்ரடெக்ஷன்ஸ் தயாரிப்பாளர் ரவீந்தரும் சீரியல் நடிகையான மகாலட்சுமியும் திருமணம் செய்து கொண்டு இன்றுடன் 28 நாட்கள் ஆகிறது. ரவீந்தர் தயாரிப்பில் உருவாம் விடும் வரை காற்று படத்தில் நடித்த போது மகாவுக்கும் ரவீந்தருக்கும் இடையே காதல் பற்றியது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்த நிலையில் திருப்பதியில் இம்மாதம் ஒன்றாம் தேதி திருமணம் செய்து கொண்டனர். சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ரெசார்ட்டில் ஹனிமூனை கொண்டாடிய அவர்கள் பின்னர் கோவில்களில் வழிபாடு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் இருவரும் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்ற போட்டோக்கள் இணையத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து இருவரும் ஜோடியாக விஜய் டிவியின் நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்றுள்ளனர். அந்த நிகழ்ச்சி விரைவில் ஒளிபரப்பாக உள்ள நிலையில் அந்த போட்டோக்களும் வெளியானது.

இந்நிலையில் ரவீந்தர் மகாலட்சுமி வீட்டில் விசேஷம் நடந்துள்ளது. அதாவது மகாலட்சுமி அணிந்திருந்த மஞ்சள் கயிறை பிரித்து கோர்த்துள்ளனர். இதுவரை நயன்தாரா ஸ்டைலில் மஞ்சள் கயிறுடன் போஸ் கொடுத்து வந்தார் மகாலட்சுமி. இதனை நெட்டிசன்கள் கூட கிண்டலடித்தனர்.

ஏன் ரவீந்தரும் தான் தாலி செயின்தான் போட நினைத்தேன் ஆனால் மகாலட்சுமிதான் மஞ்சள் கயிறு போட்டுக்கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டார் என்றார். மேலும் எல்லாம் நயன்தாரா மேடத்தால் வந்தது, அவர்தான் மஞ்சள் கயிறுடன் போஸ் கொடுத்து வருகிறார் என்று மகாலட்சுமியை கிண்டலடித்தார்.

இந்நிலையில் மகாலட்சுமியின் மஞ்சள் கயிறை மாற்றி தாலி சரடில் கோர்க்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது. இதனை ரவீந்தர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் கணவன் மனைவி இருவரும் மாலையும் கழுத்துமாக உள்ள போட்டோவையும் பகிர்ந்துள்ளார் ரவீந்தர். இதனை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *