தனுஷ் – ஐஸ்வர்யா மீண்டும் இணைகிறார்களா?.. கஸ்தூரி ராஜா அளித்த பதிலால் ரசிகர்கள் குழப்பம்..!

தனுஷ் – ஐஸ்வர்யா மீண்டும் இணைகிறார்களா?.. கஸ்தூரி ராஜா அளித்த பதிலால் ரசிகர்கள் குழப்பம்..!

ரஜினி மகள் ஐஸ்வர்யாவுக்கும், அப்போது வளரும் நடிகராக இருந்த தனுசுக்கும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில், நடிகர் தனுஷ் – இயக்குநர் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 9 மாதத்திற்கு முன் தங்களுடைய விவாகரத்தை அறிவித்தனர். இந்த செய்தி கோலிவுட் வட்டாரத்தில் பெரிதும் பேசப்பட்டது.

இந்நிலையில், யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்களின் நிலையைக் கருத்தில் கொண்டு,
ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டில் இரு குடும்பத்தினரும் சமீபத்தில் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின் போது ஏற்பட்ட சமரச பேச்சுவார்த்தையை அடுத்து, தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் இணைந்து தங்களுடைய விவாகரத்தை ரத்து செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் கசிந்தது.

dhanushaiswaryarajinkanth2

இருகுடும்பத்தினரின் சமரச பேச்சுவார்த்தையை அடுத்து, தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் இணைந்து தங்களுடைய விவாகரத்தை ரத்து செய்துள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. மேலும், இவர்கள் இருவரும் குழந்தைகளுக்காக இணைந்து வாழ முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றெல்லாம் பேசப்பட்டது.

இந்நிலையில், தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது:-

நானும், என் மனைவியும் எங்களின் பிள்ளைகள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம் எனவும், அவர்களுக்கு பிரச்சனை என்றால் அது எங்களுக்கும் தான் என்றும், நான் பணத்தை என் பிள்ளைகளிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. அவர்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதை தான் எதிர்பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.

kasthuri raja family_updatenews360

மேலும், இதுகுறித்து பேசிய அவர் நான் அறிவுரை யாருக்கும் வழங்கும் நிலையில் இல்லை என்றும், என் பிள்ளைகள் நான்கு பேரும் ஒருவரையொருவர் காயப்படுத்த மாட்டார்கள் என்பது மட்டும் எனக்கு உறுதியாக தெரியும் என தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா தெரிவித்துள்ளார்.

dhanush-Updatenews360-1-1-3-2

மேலும், தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா இவ்வாறு கூறியநிலையில், தனுஷும், ஐஸ்வர்யாவும் மீண்டும் சேரப் போவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்றும், அதே சமயம் அவர்கள் விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்குச் செல்லப் போவது இல்லை என்றும் நம்பக தகுந்த வட்டாரங்கள் மூலமாகத் தெரியவருகிறது. இதனால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *