சூப்பர் ஸ்டார்.. தளபதி, விஜய் சேதுபதியால் நெகிழ்ந்துபோன ஷாருக்கான்..!  வைரலாகும் பதிவு.!

சூப்பர் ஸ்டார்.. தளபதி, விஜய் சேதுபதியால் நெகிழ்ந்துபோன ஷாருக்கான்..! வைரலாகும் பதிவு.!

2013-ம் ஆண்டு தனது முதல் படமான ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் மெஹா ஹிட் கொடுத்து ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இந்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்து, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் வரிசையில் இடம் பிடித்தார்.

அதன் பின்னர் பாலிவுட்டில், அட்லி ஷாருக்கான் படத்தை இயக்கும் வாய்ப்பினை பெற்றார். இந்த படத்தின் பணிகள் நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படப்பிடிப்பில் ஷாருக்கான், நயன்தாரா, ப்ரியாமணி ஆகியோர் பங்கேற்று உள்ளனர்.

ரெட் சில்லீஸ் நிறுவனம் ஷாரூக்கானின் ‘ஜவான்’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப்படத்தை பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இந்த படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார். ஷாரூக்கானின் ஒரு கதாபாத்திரத்துடன் படம் முழுக்க வரும் வேடத்தில் யோகி பாபு நடிக்கவுள்ளார். மற்றொரு கதாபாத்திரத்தில் ஷாருக்கான் ராணுவ அதிகாரி வேடத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.

மேலும், ஷாரூக்கானின் ‘ஜவான்’ படத்தில், விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையயே ரஜினி, விஜய் உள்ளிட்டோர் ‘ஜவான்’ படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷாரூக்கான் ‘ஜவான்’ குறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், இந்த ஒரு மாதம் தனது படக்குழுவினருக்கு அருமையான 30 நாள் என தெரிவித்துள்ளார்.

மேலும், ஷாருக்கன் இப்படம் குறித்து உருக்கமான பதிவை பதிவிட்டுள்ளார். இதில், தலைவர் ரஜினிகாந்த் தங்களது படப்பிடிப்பு தளத்திற்கு வந்து ஆசிர்வதித்ததும், அணிருத்துடன் பார்ட்டியும், நயன்தாராவுடன் படம் பார்த்ததும், தளபதி மற்றும் விஜய் சேதுபதியுடன் ஆழமான உரையாடல், அட்லியும், பிரியாவும் அருமையான உணவை கொடுத்து உபசரித்தது என அனைத்துமே சிறப்பாக அமைந்ததாகவும் அவர்களுக்கு நன்றியை ஷாருக்கன் தெரிவித்துள்ளார்.

இப்போது சிக்கன் 65 செய்ய கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு இணையத்தில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *