“சும்மா அப்படியெல்லாம் நடிக்கமாட்டேன்”.. ஜவான் படப்பிடிப்பில் அட்லியிடம் கோபித்து கொண்ட நயன்தாரா..?

“சும்மா அப்படியெல்லாம் நடிக்கமாட்டேன்”.. ஜவான் படப்பிடிப்பில் அட்லியிடம் கோபித்து கொண்ட நயன்தாரா..?

ஜவான் படப்பிடிப்பின்போது அட்லியிடம் நயன்தாரா கோபித்துக் கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதே சமயம் இது வழக்கமான நயன்தாரா செய்தியா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

ராஜா ராணி படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்த அட்லி தற்போது பாலிவுட் சென்றிருக்கிறார். தன் முதல் பட ஹீரோயினான நயன்தாராவை தன்னுடனேயே பாலிவுட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் இந்தி படத்தை இயக்கி வருகிறார் அட்லி. அந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நயன்தாரா.

படப்பிடிப்புக்கு இடையே ஒரு குட்டி பிரேக் எடுத்துவிட்டு தான் தன் காதலரான இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு மஞ்சள் கயிற்றால் ஆன தாலியுடன் வலம் வருகிறார் நயன்தாரா.

ஜவான் பட ஷூட்டிங்கிலும் நயன்தாரா கழுத்தில் மஞ்சள் கயிறு உள்ளது. அனைத்து காட்சிகளிலும் இப்படி தாலியுடன் வர முடியாதுக்கா, கொஞ்சம் அதை கழற்றி வைக்கிறீர்களா என்று நயன்தாராவிடம் கேட்டாராம் அட்லி.

தாலி பற்றி மட்டும் என்னிடம் பேசாத. அதை கழற்றவே மாட்டேன். தாலி மறையும்படி உடை கொடு தம்பி என்று கோபப்பட்டாராம் நயன்தாரா.

இது உண்மையா, இல்லையா என்பதை அட்லி தான் கூற வேண்டும். ஏனென்றால் நயன்தாரா பற்றி அவ்வப்போது வதந்தி பரவிக் கொண்டிருக்கிறது. அதனால் இதுவும் அப்படி ஒரு வதந்தியா என்கிற சந்தேகம் ரசிகர்களுக்கு வராமல் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *