கோவாவில் பிரபல நடிகையுடன் சூர்யா எடுத்து கொண்ட செல்ஃபி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல்..!

கோவாவில் பிரபல நடிகையுடன் சூர்யா எடுத்து கொண்ட செல்ஃபி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல்..!

நடிகர் சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தின் சூட்டிங்கில் பங்கேற்றுள்ளார்.

இந்தப் படத்திற்காக கோவா அருகில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியான நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நடிகர் சூர்யா இயக்குநர்களின் நாயகனாக காணப்படுகிறார். இவரது படங்கள் அனைத்தும் ஏகத்திற்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும் அவை அனைத்தையும் பூர்த்தியும் செய்கிறது. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசத்தை காட்டி வரும் சூர்யாவின் சமீபத்திய அதிரடி விக்ரம் படத்தின் ரோலக்ஸ் கேரக்டர். கடத்தல் மன்னன் ரோலக்ஸ் சூரரைப் போற்று, ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன் போன்ற சமூக அக்கறையுள்ள படங்களாக தேர்ந்தெடுத்து நடித்துவந்த சூர்யா, திடீரென ரோலக்ஸ் போன்ற ஒரு கேரக்டரில் போதைக் கடத்தல் மன்னனாக நடித்ததை அவரது ரசிகர்களாலேயே ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இந்தப் படத்தின் விரிவான பாகம் விக்ரம் 3 படமாக விரைவில் எடுக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவா இயக்கத்தில் சூர்யா எதற்கும் துணிந்தவன் படத்தை தொடர்ந்து பாலாவின் இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்துவந்த சூர்யா, திடீரென அந்தப் படத்தின் சூட்டிங்கை நிறுத்தினார். இதையடுத்து தற்போது இயக்குநர் சிவா டைரக்ஷனில் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. கோவாவில் சூட்டிங் முன்னதாக படத்தின் பூஜை சென்னையில் போடப்பட்டு சூட்டிங்கும் சில தினங்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து தற்போது படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் கோவாவில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் படத்தில் நாயகியாக இணைந்துள்ள திஷா பதானியும் நடித்து வருகிறார்.

டூயட் பாடல் இதனிடையே இந்தப் படத்தின் டூயட் பாடல் ஒன்றை நேற்றைய தினம் படக்குழுவினர் எடுத்துள்ளனர். சிங்கம் படங்களை தொடர்ந்து தேவிஸ்ரீ பிரசாத் சூர்யாவுடன் இணைந்துள்ள நிலையில், இந்தப் படத்தின் பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பாடலுக்கு பிருந்தா மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். திஷா பதானியுடன் சூர்யா செல்ஃபி படத்தின் மோஷன் போஸ்டரில் சூர்யா மிரட்டலாக காணப்படும் நிலையில், அதில் வெளியிடப்பட்ட 5 வரலாற்று கேரக்டர்களையும் அவரே செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, திஷா பதானியுடன் சூர்யா எடுத்துக் கொண்ட செல்ஃபி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *