குழந்தை பெறும் தகுதியை இழந்த வாரிசு நடிகை.. வாடகை தாய் முடிவால் தலை தெறிக்க ஓடிய காதலர்

குழந்தை பெறும் தகுதியை இழந்த வாரிசு நடிகை.. வாடகை தாய் முடிவால் தலை தெறிக்க ஓடிய காதலர்

பாலிவுட்டில் மட்டுமே பிரபலமாக இருந்த வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் பழக்கம் தற்போது கோலிவுட் பக்கமும் தலைகாட்ட ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் நம்பர் நடிகை வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த பரபரப்பு இன்னும் ஓயாத நிலையில் வாரிசு நடிகை ஒருவரும் அந்த முயற்சியில் இறங்க இருக்கிறாராம். உலக அளவில் பிரபலமாக இருக்கும் நடிகரின் மகளான இவர் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். முன்னணி நடிகையாக வலம் வந்த இவருக்கு சமீப காலமாக பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.

Also read:வாரிசு நடிகையை மொத்தமாக கழட்டிவிட்ட தமிழ் சினிமா.. ஹாலிவுட்டில் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு

அதனால் சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த நடிகை காதலித்தவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகும் முடிவில் இருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக அவருடைய காதலருடன் ஏற்பட்ட மன வருத்தத்தின் காரணமாக அந்த காதல் பிரேக்கப்பில் முடிந்தது. அதைத்தொடர்ந்து சில காலம் விரத்தியில் இருந்த நடிகை மீண்டும் ஒருவரை காதலித்து வருகிறார்.

அவருடன் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்தார். அந்த வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென நடிகை தனக்கு இருக்கும் உடல்நல பிரச்சனையைப் பற்றி மீடியாவில் வெளிப்படையாக தெரிவித்தார். இதனால் நடிகைக்கு உடலில் மிகப்பெரிய பாதிப்பு இருப்பதாக செய்திகள் பரவியது.

Also read:வீட்டு வேலைக்கு வந்த பெண்ணை மயக்கிய இயக்குனர்.. நடிகையாக மாற்றிய சம்பவம்

மேலும் நடிகை குழந்தை பெற தகுதி இல்லாதவர் என்ற பேச்சும் கிளம்பியது. இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்த நிலையில் நடிகையின் காதலரோ இந்த விஷயத்தை மறைத்தது குறித்து நடிகையிடம் பயங்கரமாக சண்டை இட்டு இருக்கிறார். அது மட்டும்ல்லாமல் இருவரும் பிரியும் நிலைக்கும் சென்றனர்.

மீண்டும் ஒரு காதல் தோல்வியை தாங்கிக் கொள்ள முடியாத நடிகை காதலரிடம் திருமணம் செய்து கொண்டு வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார். இதனால் அதிர்ந்து போன காதலர் முடியவே முடியாது என்று கூறி நடிகையை விட்டு பிரிந்து விட்டாராம்.

Also read:தயாரிப்பாளரை அட்ஜஸ்ட் செய்ய சொன்ன கணவர்.. கொதித்துப் போய் விவாகரத்து செய்த நடிகை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *