கவர்ச்சி நடிகையின் கணவரை குறி வைத்த சமந்தா: இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த முக்கிய தகவல்..!

கவர்ச்சி நடிகையின் கணவரை குறி வைத்த சமந்தா: இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த முக்கிய தகவல்..!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. தமிழில் ‘பானா காத்தாடி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து ‘நான் ஈ, நீதானே என் பொன் வசந்தம், அஞ்சான்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.

மேலும் இவர் விஜய், சூர்யா, ஜீவா எனப் பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து தனக்கென ஒரு இடத்தை பெற்றவர். இவ்வாறாக படங்களில் பிஸியாக நடித்து வந்த சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

கல்யாணம் முடிந்த ஒரு சில மாதங்களில் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். எனினும் அவர்களின் திருமண வாழ்க்கை இறுதியில் விவாகரத்தில் முடிந்து விட்டது.

இருப்பினும் சோர்ந்து விடாது மீண்டும் பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகின்றார். அந்தவகையில் தமிழ், தெலுங்கு, கனடா போன்ற மூன்று மொழிகளிலும் நடித்து வருகிறார்.

கோலிவுட்டில் கலக்கி வந்த சமந்தா தற்போது பாலிவுட்டிலும் பிசியாக பல படங்களில் நடித்து வருகிறார். அதில் அவரது முதல் அறிமுகமான பாலிவுட் படத்தில் நடிகர் ஆயுஷ்மான் குரானா கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தின் உடைய படப்பிடிப்புக்கள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இப்படம் மட்டுமல்லாமல் இன்னும் ஒரு சில படங்களை கைவசம் வைத்துள்ளார் சமந்தா. அந்தவகையில் இதில் ஒரு திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் விக்கி கவுஷலுடன் இணைந்து நடிக்கவிருக்கிறாராம். நடிகர் விக்கி கவுஷலுக்கு கடந்த வருடம் தான் நடிகை கத்ரினா கைஃப்புடன் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்புக்கள் இப்போதிருந்தே கிளம்பத் தொடங்கியிருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *