என்னா அடி… கூட்ட நெரிசலில் தகாத முறையில் தொட்ட நபருக்கு பளார்விட்ட நடிகை..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online

என்னா அடி… கூட்ட நெரிசலில் தகாத முறையில் தொட்ட நபருக்கு பளார்விட்ட நடிகை..! – Update News 360 | Tamil News Online | Live News | Breaking News Online

சினிமா ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் போது நடிகையிடம் நபர் ஒருவர் தகாத முறையில் நடந்திருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோட்டில் ஹைலைட் மாலில் நேற்று சினிமா ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகைகள் பலர் பங்கேற்று இருந்தார்கள். மலையாள நடிகைகள் சானியா ஐயப்பன், க்ரேஸ் ஆண்டனி ஆகிய இருவருமே இந்த நிகழ்ச்சியில் கலந்து இருந்தார்கள்.

அப்போது கூட்ட நெரிசலில் நடிகைகளிடம் சிலர் மோசமாக நடந்து கொண்ட சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, சினிமா பட புரமோஷன் நிகழ்ச்சி முடிந்து மேடையில் இருந்து இரண்டு நடிகைகளுமே கீழே இறங்கி சென்றிருக்கிறார்கள். அப்போது நடிகைகளுடன் செல்பி எடுப்பதற்காக சிலர் அவர்களை நெருங்கி சென்றனர்.

அந்த சமயத்தில் தான் ஒருவர் நடிகையின் மீது கை வைத்திருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த நடிகை அந்த நபரை தாக்கி இருக்கிறார். இதனை அடுத்து அந்த இடத்தில் பயங்கர சலசலப்பு ஏற்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். பின் தகவல் சோசியல் மீடியாவில் வைரலானது. இந்த சம்பவத்தால் கோழிக்கோடு ஹைலைட் மாலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டு இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *