இன்று பிறந்தநாள் கொண்டாடும் குஷ்புவுக்கு இன்ப அதிர்ச்சி: இப்படியுமா வாழ்த்து சொல்லுவாங்க.. திக்குமுக்காடிப் போன குஷ்பு..! – Tamil News Online | Live News | Breaking News Online

இன்று பிறந்தநாள் கொண்டாடும் குஷ்புவுக்கு இன்ப அதிர்ச்சி: இப்படியுமா வாழ்த்து சொல்லுவாங்க.. திக்குமுக்காடிப் போன குஷ்பு..! – Tamil News Online | Live News | Breaking News Online

குஷ்பு விஷயத்தில் இளைய திலகம் பிரபு சொன்னது தான் நடக்கிறது. அவர் ஒரு தீர்க்கதரிசி என்கிறார்கள் ரசிகர்கள்.

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை குஷ்புவுக்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு இன்று தன் பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும் தங்களுக்கு பிடித்த குஷ்புவின் பாடல் வீடியோக்களையும் ஷேர் செய்கிறார்கள்.

பி. வாசு இயக்கத்தில் பிரபுவும், குஷ்புவும் சேர்ந்து நடித்த சின்னத்தம்பி படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அந்த படத்தில் வந்த அரைச்ச சந்தனம் பாடலில், என்னைக்கும் வயசு மூவாறு என் சொல்லு பலிக்கும் பாரு என குஷ்புவை பார்த்து பிரபு பாடியிருப்பார். அவர் பாடியது மிகவும் சரி என்கிறார்கள் ரசிகர்கள்.

என்னைக்கும் வயசு மூவாறு என்று பிரபு பாடினார். ஆனால் 18 அல்ல மாறாக 16 வயது பெண் போன்று இருக்கிறார் குஷ்பு என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். குஷ்பு தன் உடல் எடையை வெகுவாக குறைத்த பிறகு மகள்கள் அவந்திகா, அனந்திதாவுக்கு அக்கா மாதிரி தெரிகிறார் என்று ரசிகர்கள் அடிக்கடி கூறுகிறார்கள்.

குஷ்பு கோவில், குஷ்பு சேலை, குஷ்பு ஜும்கா, குஷ்பு இட்லி என்று இதுவரை யாருக்கும் நடந்தது இல்லை. அடித்துக்கொள்ள முடியாது லேடி சூப்பர் ஸ்டார் குஷ்பு. அவர் மனிதக் கடவுள் என்று கூறி ரசிகர்கள் வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *