இது வார்னிங்… ‘மன்னிப்பு கேட்கலன்னா கிரிமினல் கேஸ் போடுவேன்’ – மீண்டும் பயில்வானை வெளுத்து வாங்கிய ஏ.ஆர் ரஹ்மான் சகோதரி..! – LN Thamizha News Updates | Tamil News Online | Live News | Breaking News Online

இது வார்னிங்… ‘மன்னிப்பு கேட்கலன்னா கிரிமினல் கேஸ் போடுவேன்’ – மீண்டும் பயில்வானை வெளுத்து வாங்கிய ஏ.ஆர் ரஹ்மான் சகோதரி..! – LN Thamizha News Updates | Tamil News Online | Live News | Breaking News Online

மன்னிப்பு கேட்காவிட்டால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என ஏஆர் ரஹ்மானின் சகோதரியான ரைஹானா, பயில்வான் ரங்கநாதனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிரபல நடிகராகவும் பத்திரிகையாளராகவும் வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். தமிழ் சினிமா குறித்தும் சினிமாக்காரர்கள் குறித்தும் பல்வேறு தகவல்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் கவிஞர் வைரமுத்து புறக்கணிக்கப்பட்டது ஏன் என கூறி வீடியோ வெளியிட்டிருந்தார்.

அதில் இயக்குநர் மணிரத்னத்தின் மனைவியான நடிகை சுஹாசினி, வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட சின்மயிக்கு ஆதரவாக உள்ளார். சின்மயி வைரமுத்து குறித்து கூறிய மீடூ புகார் காரணமாக மணிரத்னத்திடம் பேசி வைரமுத்துவுக்கு இந்தப் படத்தில் பாடல் கொடுக்கவில்லை என்றார்.

மேலும் ஏஆர் ரஹ்மானின் சகோதரியான பாடகி ரைஹானாவிடமும் வைரமுத்து வேலையை காட்டியுள்ளார் என்று கூறினார். மேலும் இதனை ரைஹானாவே பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியிருக்கிறார் என்றும் தெரிவித்தார் பயில்வான் ரங்கநாதன். இதனால் வைரமுத்து இந்தப் படத்தில் பாடல் எழுதினால் தான் இசையமைக்க முடியாது என ஏஆர் ரஹ்மான் கூறி விட்டார் என்றும் கூறினார் பயில்வான் ரங்கநாதன்.

பயில்வான் ரங்கநாதனின் இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ரைஹானா, பயில்வான் ரங்கநாதனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவை ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

அதில் அனைவருக்கும் வணக்கம், பயில்வான் பேசிய தவறான செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. மேலும் கமெண்ட் பகுதியிலும் எனக்கு எதிராக சில கருத்துகள் உள்ளன, சில தவறானவர்கள் அவற்றைச் செய்கிறார்கள். இதற்காக பயில்வான் ரங்கநாதனை மன்னிப்பு கேட்கும்படி கேட்டுக் கொண்டேன், அவர் அதைச் செய்ய ஒப்புக்கொண்டார்.

அவர் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவர் மீது கிரிமினல் வழக்கு மற்றும் அவதூறு வழக்குத் தொடருவேன். உங்கள் அனைவருக்கும் என் மீது நம்பிக்கை இருக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு ரைஹானா தனது ஃபேஸ் புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் ரைஹானாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *