அப்பவும்.. இப்பவும்.. ‘எனக்கு கிடைக்கவே இல்லை’ –  பிரபல நடிகையால் விக்ரம் ஆதங்கம்..!

அப்பவும்.. இப்பவும்.. ‘எனக்கு கிடைக்கவே இல்லை’ – பிரபல நடிகையால் விக்ரம் ஆதங்கம்..!

பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்.30ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனையொட்டி படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் தொடங்கி திருவனந்தபுரம், ஹைதராபாத், மும்பை என படக்குழுவினர் பறந்து பறந்து தீவிர ப்ரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷனில் பேசியபோது, “பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் எனக்கு இருக்கும் ஒரு சோகம் இதிலும் ஐஸ்வர்யா ராய் எனக்கு கிடைக்கவில்லை.

ஏற்கனவே மணிரத்தினம் இயக்கத்தில் நடித்த ‘ராவணன்’ படத்தில் ஐஸ்வர்யா ராய் மீது காதல் கொள்ளும் கதாபத்திரத்தில் நடித்திருந்தாலும் கடைசியில் ராவணன் இறந்துவிடுவார்.

இதை தொடர்ந்து இந்த முறை பொன்னியின் செல்வன் படத்தில், இணைந்துள்ளோம். ஏன் ஐஸ்வர்யா இப்படி செய்தீர்கள்” என்றார். தற்போது அவரது பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *